மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதிகள்.. 10 அழகிகள் கைது.!

0
290
Common photo

களுத்துறையில் வாதுவை நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரண்டு விபச்சார விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 பெண்கள் உட்பட 11 பேர் வாதுவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாதுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

20 முதல் 50 வயதுக்குட்பட்ட 10 பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், வர்த்தகர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளை நடத்தி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.