ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உலுவடுகே சந்தமாலி மீதான தாக்குதல் சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (16) இரவு கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்கு அருகில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் சிலரால் தாம் தாக்கப்பட்டதாக அவர் ‘அத தெரண’விடம் தெரிவித்தார்.
தாக்குதலில் காயமடைந்த மாநகர சபை உறுப்பினர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனினும் இரு தரப்பினரை சேர்ந்த நபர்களும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.










