அஸ்வெசும பணத்தை மோசடி செய்த பெண் அதிகாரி ஒருவர் கைது..!

0
140

அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததற்காக பிரதேச செயலகம் ஒன்றின் பெண் அதிகாரி ஒருவரை பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் கொலொன்ன பிரதேச செயலகத்தில் பணிபுரியும் முகாமைத்துவ சேவைகள் அதிகாரி ஆவார்.

சந்தேக நபர் முப்பத்தைந்து இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் அஸ்வெசும பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு மேற்கொள்ளவுள்ளது.