அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரிப்பு.!

0
154

இந்தியாவின் அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் உயிரிழப்பு என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி பிடித்த தீயால் 1,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான விபத்தின்போது ஏற்பட்ட வெப்பத்தால் சுற்றுவட்டாரத்தில் பறவைகளும் தப்பவில்லை எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.