வயலில் இருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்ப்பு.!

0
193

வயல் ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னாருவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (12) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இந்த சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் எனவும்இ அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.