ஹொரணை – வாகவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது…
ஹொரணை, வகவத்தை பகுதியில் மோட்டார் வாகனம் ஒன்று, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது
குறித்த விபத்து சம்பவம் CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியிலும் மோட்டார் சைக்கிளிலும் பயணித்த இருவர் படுகாயமடைந்து ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், விபத்தில் காயமடைந்த காரின் ஓட்டுநர் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்
ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CCTV Video – https://web.facebook.com/share/v/1Ab9Jc5hb8/