அரச வங்கியொன்றின் மூன்று பெண் அதிகாரிகள் கைது.!

0
204

99.3 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் அரச வங்கியொன்றின் மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட வங்கியின் அடகுப் பிரிவில் பணிபுரிந்த சந்தேக நபர்கள், 24 கரட் தங்கம் போல் போலி தங்கப் பொருட்களை அடகு வைத்து பணத்தை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் ஏற்கனவே வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த மோசடியில் தொடர்புடைய பல வங்கி அதிகாரிகள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.