18 ஆண்டுகளுக்குப் பிறகு IPL கோப்பையை வென்ற RCB – கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு..!

0
150

18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை வென்றதால் பெங்களூருவில் நடைபெற்ற வெறித்தனமான கொண்டாட்டம் இரு இடங்களில் ஏற்பட்ட கடும் சன நெரிசலில் சிக்கி அண்ணளவாக 11 பேர் மரணித்ததையடுத்து சோக நிகழ்வாக மாறியுள்ளது.

அணியைப் பாராட்டுவதற்காக சின்னசாமி மைதானம் அருகே கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) ஒழுங்கு செய்த நிகழ்வில் கூட்டம் கூடியதைத் தொடர்ந்து குழப்பம் தொடங்கியது.

காயமடைந்த மற்றும் மயக்கமடைந்தவர்களை பொலிஸார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றுவதை காட்சிகள் காட்டுகின்றன. கொண்டாட்டங்களைக் காண வந்த பலர் கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.