மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு.!

0
155

மதுரங்குளிய – சீமரகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (01) பிற்பகல் இந்த விபத்து நடந்ததாக மதுரங்குளிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் உயிரிழந்தவர் சீமரகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவராவார்.

வீட்டில் மின் சாதனத்தை நிறுவ முயன்றபோது, சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.