இ.போ.ச பேருந்தின் பின்புறத்தில் மோதிய டிப்பர்; 07 பேர் வைத்தியசாலையில்.!

0
34

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்புறத்தில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்று மோதி இன்று (24) விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் உட்பட 07 பேர் காயமடைந்து தனமல்வில பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பாக டிப்பர் சாரதி தனமல்வில தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.