உணவக உரிமையாளர் ப.டு.கொ.லை – இருவர் கைது..!

0
1

நீர்கொழும்பு – எத்துகால பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் வெள்ளிக்கிழமை (23) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் திங்கட்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 19 மற்றும் 23 வயதுடைய நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து 100,960 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாள் வென்னப்புவை – நைனாமடு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.