மோட்டார் வாகன போக்குவரத்து பிரதி ஆணையாளர் உட்பட 3 பேர் கைது.!

0
248

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் உட்பட மூன்று அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இலஞ்சமாக பெற்றதாக நம்பப்படும் 4 மில்லியன் ரூபாய் பணத்தை வைத்திருந்தமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.