ஹஜ் பெருநாள் எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளதால், அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் அனைத்து முஸ்லிம் பாடசாலைகுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, குறித்த விடுமுறை தினங்களுக்கு பதிலாக மே 26 ஆம் திகதி திங்கள் கிழமை மற்றும் மே 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலைகள் நடத்தப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2025 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை மே 26 ஆம் திகதி ஆரம்பமாகும் என கூறப்பட்டுள்ளது.