தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) இடமாற்றங்களும் நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
பொலிஸ் தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பில், இதன்படி 12 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 4 பொலிஸ் பரிசோதகர்களுக்கு இவ்வாறு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடமாற்றங்கள் பின்வருமாறு…
- பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.சி. ஹெட்டியாரச்சி – சீன துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து யக்கலமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.வி.ஏ.டி.பி. பெரேரா – யக்கலமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து சீன துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பொலிஸ் பரிசோதகர் என்.எஸ்.பி. அபேவர்தன – நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து திம்புலபதன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எம். ஆனந்தசிறி – திம்புலபதன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பொலிஸ் பரிசோதகர் ஆர். நிரோஷன் – சிதம்பரபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து நல்லதன்னிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பிரதான பொலிஸ் பரிசோதகர் ஈ.ஏ.பி.எஸ். வீரசேகர – நல்லதன்னிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து சிதம்பரபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.ஜே. குணதிலக – மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து கஹடகஸ்திகிலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பிரதான பொலிஸ் பரிசோதகர் ஈ.எஸ். அபேசேகர – கஹடகஸ்திகிலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பொலிஸ் பரிசோதகர் ஜி.கே. ராஜகருணா – மஹவ பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் பரிசோதகர் பதவியில் இருந்து சாதாரண கடமைகளுக்காக அனுராதபுரம் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.ஏ.பி.ஏ. பொல்பிதிகம குலதுங்க -பொல்பிதிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து மஹவ பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.எம்.எஸ். பண்டார – நிக்கவெரட்டிய பிரிவில் இருந்து பொல்பிதிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமை புரிய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.ஆர். லக்ஷ்மன் – அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பொலிஸ் பரிசோதகர் யூ.கே.ஜி.கே.எச். சுபசிங்ஹ – ரிதீகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்..
- பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.டி.எஸ்.சி. புஷ்ப குமார – கண்டி பிரிவில் இருந்து ரிதீகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பிரதான பொலிஸ் பரிசோதகர் ஐ.எல்.எம். சிந்தக குமார – களனி பிரிவில் இருந்து மீகஹவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் கடமை புரிய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பிரதான பொலிஸ் பரிசோதகர் ஈ.ஜி. நிலந்த – வைத்திய சேவை பிரிவில் இருந்து கல்கிஸ்ஸ பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.