சுனாமி குறித்த புதிய பாபா வாங்காவின் கணிப்பால், தங்களது பயண திட்டத்தை பெரும்பாலான மக்கள் ரத்து செய்து வருகின்றனர்.
1911ஆம் ஆண்டு பல்கேரியாவில் பிறந்த பாபா வங்கா, தனது 12 வயதில் கண்பார்வை இழந்தார். அவரின் பார்வை இழப்புக்கு பின்னர், எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளை கணிக்கும் சக்தி அவருக்கு கிடைத்ததாக நம்பப்படுகிறது. 9/11 தாக்குதல், கொரோனா தொற்று, போப் மரணம் உள்ளிட்ட அவரது பல கணிப்புகள் உண்மையாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், சுனாமி குறித்த பாபா வாங்காவின் கணிப்பால், தங்களது பயண திட்டத்தை பெரும்பாலான மக்கள் ரத்து செய்து வருகின்றனர். அதாவது, 2025 ஜூலை மாதம் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே மிகப்பெரிய அளவில் சுனாமி ஏற்படும் என கணித்துள்ளார் பாபா வாங்கா. மேலும், இந்த சுனாமி கடந்த 2011ஆம் ஆண்டில் ஏற்பட்டதை விட 3 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் அவரது கணிப்பில் எச்சரித்துள்ளார்.
ஆனால், இவரது கணிப்பு தொடர்பாக ஜப்பான் அரசு இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், ஜப்பானில் உள்ள சீன தூதரகம், இயற்கை பேரழிவு குறித்து நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. மேலும், பாபா வாங்காவின் சுனாமி தொடர்பான கணிப்பு காரணமாக, ஜப்பானுக்கு செல்ல திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 50% பேர் தற்போது தங்களது முன்பதிவினை ரத்து செய்துள்ளதாக சுற்றுலா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.C