நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு பொறியியல் அறிக்கைகள் கட்டாயம்.!

0
32

நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளுக்கு பொறியியல் அறிக்கையைப் பெறுவதை கட்டாயமாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

நீண்ட தூர சேவை பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, மேலும் 100 கிலோமீற்றருக்கு அதிக தூரம் பயணம் செய்யும் அனைத்து பேருந்துகளும் இந்த அறிக்கையைப் பெற வேண்டும்.

அதன்படி, ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் பொறியியல் அறிக்கையைப் பெறுவது கட்டாயம் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதேவேளை, ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் பயணிகள் பேருந்துகளுக்கு பயணச்சீட்டுகள் வழங்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட வீதிப் பாதுகாப்புக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட, ஜூலை முதலாம் திகதி முதல் பயணிகள் பேருந்துகளில் பொருத்தப்படும் மேலதிக சாதனங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.