இன்று புதன்கிழமை (21) இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு – கருநாட்டுக்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் -03 இல் கல்வி கற்கும் மாதீஸ்வரன் நர்மதா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீதியில் மிக வேகமாக வந்த மீன் ஏற்றும் வாகனம் சிறுமி மீது மோதியதியுள்ளதுடன், சிறுமி 20 தொடகம் 30 அடி வரையான தூரத்திற்கு வாகனத்தால் இழுத்துச் செல்லப்பட்ட பிற்பாடு வாகனம் நிறுத்த பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
பாடசாலைக்கு மாணவர்கள் செல்கின்ற காலை வேளையில் இந்தச் சம்பவம் பாடசாலைக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இந்தப் பகுதியில் வீதிப் போக்குவரத்து பொலிஸார் எவரும் குறித்த நேரத்தில் கடமையில் ஈடுபட்டு இருக்கவில்லை.
இந்த விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதியான புத்தளம் பகுதியினை சேர்ந்தவரை கொக்கிளாய் பொலீஸ் கைது செய்துள்ளார்கள்.
முல்லைத்தீவு கொக்கிளாய் மற்றும், கருநாட்டுக்கேணி பகுதியிலிருந்து மீன் ஏற்றிச் செல்கிற வாகனங்கள் எப்போதும் வேகக் கட்டுப்பாடின்றி மிக வேகமாகச் செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொக்கிளாய் பொலிஸார் இது தொடர்பான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்வதில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்..
கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவும் இவ்வாறு மீன் ஏற்றிச் செல்கிற தென்னிலங்கைப் பகுதியைச் சேர்ந்த வாகனமொன்று கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு அண்மையில் மாணவன் ஒருவன் மீது மோதியதில் குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.(Photos,Video-FB)