வீட்டு ஓனருடன் அடிக்கடி உல்லாசம்.. கண்டித்த கணவரை காரை ஏற்றிக் கொ.ன்.ற மனைவி..!

0
23

இந்தியாவின் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையார்புரம் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்துரை (வயது 43). இவர், நடத்துனராக பணியாற்றி வந்த நிலையில், இவருக்கு பேச்சியம்மாள் (35) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளுடன் உள்ளனர். வேல்துரை தனது மனைவி, குழந்தைகளுடன் அடைக்கலப்பட்டணத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

வேல்துரை தினமும் தனது இருசக்கர வாகனத்தில் பாவூர்சத்திரத்திற்கு சென்றுவிட்டு, அங்கிருந்து பேருந்தில் சென்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் வழக்கம்போல, வேலைக்கு சென்ற வேல்துரை, கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது.

அப்போது, காரை ஓட்டிவந்தது பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (36) என்பதும், இது விபத்து அல்ல.. திட்டமிட்ட கொலை என்பதும் தெரியவந்தது.

அதாவது, வேல்துரை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் சுதாகருக்கும் (41) பேச்சியம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வேல்துரை பணிக்கு சென்ற பின்னர், இருவரும் உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த விவகாரம் வேல்துரைக்கு தெரியவந்த நிலையில், இருவரையும் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் வேல்துரையை கொலை செய்ய திட்டமிட்டு, தனது நண்பரான கார் டிரைவர் ஆறுமுகம் உதவியுடன் வேல்துரையை காரை ஏற்றி கொலை செய்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த கொலை வழக்கில் சுதாகர், பேச்சியம்மாள், ஆறுமுகம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.C