மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை (20) இளம் குடும்பஸ்தரை முதலை இழுத்துச் சென்றுள்ளது.
இந்நிலையில் முதலை சென்ற நிலையில் இன்று (21) மதியம் குறித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய அழகுதுரை அழகேசன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.
இவருடைய உடலின் பெரும்பாலான பாகங்களை முதலை உட்கொண்டுருந்த நிலையில் எஞ்சிய உடற்பாகங்களை பிரதேச மீனவர்கள் மீட்டெடுத்துள்ளனர்.
வீடியோ கீழே இணைக்கப்படுள்ளது.(Photos,Video-FB)