மட்டக்களப்பில் 22 கஜ முத்துகளுடன் இருவர் கைது.!

0
183

21ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு, ஏறாவூரில் கஜ முத்து எனப்படும் யானை தந்தத்தில் காணப்படும் 22 முத்துகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கட்டளைக்கு இணங்க, மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி IP தெ.மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.