பதுளையில் தன்னை வெட்டிய தம்பியை பழிவாங்க வைத்திய சிகிச்சையிலிருந்து மீண்டு வந்ததும் தம்பியை பல பேர் பாத்திருக்க வெட்டிச் சாய்த்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னால் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சகோதரர்கள் இருவருக்கிடையே இருந்து வந்த நீண்ட நாள் பகை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகிய நபர், தனது அண்ணனாகிய தாக்குதல் மேற்கொண்ட நபரை சில மாதங்களுக்கு முன் வாளால் வெட்டியதில் குறித்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பின், குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
குறித்த நபரை ஆபத்தான நிலையில் இருந்து மீட்டெடுக்க வைத்தியசாலையில் சுமார் ஒரு கோடி அளவில் செலவாகியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குணமடைந்து வீடு திரும்பியவர், பழிக்கு பழி வாங்கும் நோக்கில் தனது இளைய சகோதரனை இன்று வாளால் வெட்டியதாக தெரியவருகின்றது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மிகவும் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீடியோ கீழே இணைக்கப்படுள்ளது. (எச்சரிக்கை உள்ளடக்கம், இது சங்கடத்தை தரும்.)