மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!

0
45

பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடபாத்த வீதியில், மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பொல்கசோவிட்ட பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.

மடபாத்தயிலிருந்து பிலியந்தலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வலது பக்க வீதியில் திரும்பும் போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.(Photos-FB)