மது போதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி கைது..!

0
202
Common Photo

மது போதையில் ‘சிசுசெரிய’ பேருந்து ஒன்றை செலுத்திய பேருந்து சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (19) மதிய வேளையில், கட்டுபோத்த பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால், கட்டுபோத்த நகரில் ‘சிசு செரிய’ பேருந்து ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அப்போது, அந்த சாரதி மது போதையில் இருப்பது கண்டறியப்பட்டு, பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர், 52 வயதுடைய, கட்டுபோத்த, ரதலியகொட பகுதியைச் சேர்ந்த ஒருவராவார்.

கைது செய்யப்பட்ட சமயத்தில், பேருந்தில் 16 பாடசாலை மாணவர்களும், இரண்டு தாய்மார்களும் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அந்த பேருந்தும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் இன்று (20) நாரம்மல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தற்போது, இலங்கை பொலிஸார் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்கும், போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.