மன்னார் கடற்கரையில் கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு.!

0
332

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அச்சங்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த சடலம் நேற்று (17) இரவு அப்பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த ஆணின் சடலம் முற்றிலும் சிதைவடைந்துள்ள போதும், சிதைவடையாமல் காணப்படும் ஆடைகளை வைத்து குறித்த ஆண் 30 வயதுக்கு மேல் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர்கள் அச்சங்குளம் கிராம சேவையாளருக்கு அறிவித்ததை தொடர்ந்து கிராம சேவையாளர் முருங்கன் பொலிஸார், அச்சங்குளம் கடற்படையினர் குறித்த உடலை பார்வையிட்டனர்.

சடலத்தை மீட்ட முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (Pic-FB)