தனியார் பேரூந்து மோதியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு.!

0
27

நேற்று மாலை, வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாரியபொல-சிலாபம் வீதியில், வாரியபொல நகரில் குருநாகல் திசையிலிருந்து வாரியபொல பேருந்து நிலையம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, பாதசாரி கடவையைக் கடந்த பெண் ஒருவர் மீது மோதியது.

விபத்தில் பலத்த காயமடைந்த பெண், வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மஹாகெலிய வாரியபொல பகுதியைச் சேர்ந்த 66 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.