ஹபரணை பொலிஸ் பிரிவின் குடரம்பாவெவ-கும்புக்வெவ வீதியில் குடரம்பாவெவ நெல் வயல்களுக்கு அருகில் நேற்று மாலை கெப் வண்டி ஒன்று வீதியில் நின்று கொண்டிருந்த சிறுவன் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து நேற்று (17) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன், ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஹபரணை, குடாரம்பாவெவ பகுதியைச் சேர்ந்த 8 வயதான சிறுவன் என தெரியவந்துள்ளது.