யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவன் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று, இந்த இளைஞன் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றியுள்ள நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார்.
பின்னர் இந்த இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த இளைஞன் நீண்ட காலமாக ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.