திருகோணமலை விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.. தப்பிச்சென்ற வாகனம்.!

0
25

மோட்டார்சைக்கிளுடன் விபத்தை ஏற்படுத்தி விட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் வாகனம் தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இன்று (17) அதிகாலை ஹபரண திருகோணமலை வீதியில் ஹபரண, கல்வாங்குவா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் ஊடகவியலாளர் பியான் என கூறப்படுகின்றது. (Photos,Video-FB)