எதிர்வரும் 23 ஆம் திகதிவரை மழை தொடரும்.. வெளியான அறிவிப்பு.!

0
21

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் கனமான மழை எதிர்வரும் 23.05.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது.

இம் மழையின் போது இடிமின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும் என்பதனால் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.

அண்மித்த ஆண்டுகளில் மே மாதம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிக மழை தரும் மாதங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

குறிப்பாக நவம்பர் மாதத்திற்கு அடுத்து அதிக மழை கிடைக்கும் மாதமாக மே மாதம் மாறி வருகின்றது. கடந்த 10 ஆண்டுகளாக மே மாதத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கணிசமான அளவு மழை கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணத்தில் மே மாதத்தைப் பொறுத்தவரை 2020ம் ஆண்டு 86 மி.மீ. உம், 2021ல் 117 மி.மீ.உம், 2022ல் 138 மி.மீ.உம், 2023 ல் 186 மி.மீ. உம் 2024 312 மி. மீ. உம் இவ்வாண்டு (2025) இன்று இரவு 9.00 மணி வரை 162 மி.மீ. உம் மழை கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நாகமுத்து பிரதீபராஜா)

வளிமண்டலவியல் திணைக்களம் –

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.