அநுராதபுரம் – கல்நேவ பகுதியில் நீர் நிரம்பிய குழியில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் – கல்நேவ பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது…
சம்பவத்தன்று உயிரிழந்த சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென காணாமல்போயுள்ளார்.
பின்னர் சிறுவனின் பெற்றோர் அயலவர்களின் உதவியுடன் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது சிறுவன் நீர் நிரம்பிய குழியில் விழுந்து கிடப்பதை அவர்கள் கண்டுள்ளனர்.
பின்னர் சிறுவனின் பெற்றோர் சிறுவனை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அதற்குள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் நெகம்பஹ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்நேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.