13 வயதில் அப்பாவான பள்ளி மாணவன்.. டியூசன் ஆசிரியையின் உல்லாச ஆசையால் நடந்த விபரீதம்..!

0
63

இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத்தில் 13 வயது சிறுவனை கடத்திச் சென்று 23 வயது டியூசன் ஆசிரியை உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த ஆசிரியை கர்ப்பமாக இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, தற்போது கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், கருவின் டிஎன்ஏ பரிசோதனை செய்து, அதை பாதுகாப்பாக வைத்திருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், “ஏப்ரல் 25ஆம் தேதி டியூசன் ஆசிரியை மாணவனை வதோதரா, அகமதாபாத், ஜெய்ப்பூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டியுள்ளார். அந்த மாணவனுடன், ஆசிரியை கடந்த 2 ஆண்டுகளாக காதலில் இருந்துள்ளார்.

அவர்களுக்குள் ஓராண்டாக உடலுறவு இருந்துள்ளது. மாணவன் வகுப்பில் படிக்கும்போது, அந்த ஆசிரியை அவரது வீட்டிற்கே சென்று டியூசன் நடத்தி வந்துள்ளார். பின்னர், தனது வீட்டில் டியூசன் நடத்தத் தொடங்கியதாகவும் அந்த ஆசிரியை போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் மாணவனுக்கு புதிய ஆடைகள், காலணிகள் போன்றவற்றை வாங்கி, திட்டமிட்டே வீட்டை விட்டு ஓடிச் சென்றதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், ஏப்ரல் 30ஆம் தேதி இருவரும் ஜெய்ப்பூரில் இருந்து அகமதாபாத் நோக்கி வரும் போது பேருந்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அந்த ஆசிரியையின் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், சூரத்தில் உள்ள மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குழந்தையின் டிஎன்ஏ மற்றும் மாணவனுக்கு டிஎன்ஏ பரிசோதனைகள் நடத்தப்பட்டு உண்மை உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.C

இந்த செய்தி யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் பதிவிடவில்லை.. இந்த உலகில் இவ்வாறான சம்பவங்களும் நடக்கின்றன என்பதற்காகவே பதிவிடப்படுகின்றது.