மனைவி, பிள்ளையை பிரிந்து வாழ்ந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்ப்பு.!

0
28

இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லகெட்டிய பகுதியில் உள்ள வீடொன்றின் படுக்கையறையில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் எம்பிலிபிட்டிய துன்கம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார். இவர் தனது மனைவி மற்றும் பிள்ளையை பிரிந்து கடந்த 8 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.