சூரிய மின் உற்பத்தி மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ள இலங்கை.!

0
22

இலங்கை முழுவதும் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1 ஆம் திகதி வரை மெகாவோட் 1,700 என்ற எல்லையை அடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்கள் கூறியதாவது, மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி, இந்நாட்டில் முக்கியமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மைல்கல்லை எட்டியுள்ளது.

நாட்டின் மக்கள், வணிகங்கள் மற்றும் நிறுவனங்களின் பசுமையான மற்றும் நிலையான எரிசக்தி எதிர்காலத்திற்கான அர்ப்பணிப்பு இந்த முன்னேற்றத்தில் பிரதிபலிக்கிறது என மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் கவனம் செலுத்தியமை தொடர்பாக, மின்சார சபை அனைத்து சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களுக்கும் தமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.