குருணாகல் – பொல்கஹவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெனகமுவ பிரதேசத்தில் உள்ள பௌத்த துறவிகள் மடத்தில் தங்கியிருந்த சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொல்கஹவல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம், பதவிய பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று, மடத்தில் தங்கியிருந்த தேரர் ஒருவர் கிணற்றில் சிறுவன் விழுந்திருப்பதை கண்டு, சிறுவனை மீட்டு உடனடியாக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் குருணாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொல்கஹவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.