யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்று விட்டு, திரும்பிய நபர் திடீரென மயக்கமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
சுழிபுரம் பகுதியை சேர்ந்த பரம்சோதி சதீஸ் (வயது-26) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…
அண்மையில் திருமணமான தம்பதியினர் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விருந்துக்கு சென்றுள்ளனர்.
விருந்தில் உணவருந்திய பின்னர், வீடு திரும்பிய தம்பதியினரில், கணவர் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ், போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.(Pic-FB)