கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பேருந்தை பாதுகாப்பற்றவகையில் செலுத்தியமை தொடர்பில் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணிகள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து களுத்துறை பகுதியில் வைத்து களுத்துறை தெற்கு பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் குறித்த சாரதி, சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்திய போது அவர் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.