பசறையில் உயிரிழந்த 7 வயது சிறுமி தொடர்பில் வெளியான தகவல்.!

0
32

பசறை – உடகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் திடீர் நோய் நிலைமை காரணமாக பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.

7 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே சிறுமி உயிரிழந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் அவரது உடலில் காணப்பட்டதாக பசறை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பசறை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள பசறை காவல்துறையினர் இந்த விடயம் தொடர்பில் நீதவானிடம் சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர்.

குறித்த சிறுமியின் தாய் அவரை பிரிந்து சென்ற நிலையில், தமது தந்தையின் இரண்டாம் மனைவியுடனேயே அவர் வசித்து வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.