யாழ்ப்பாணத்தை சேர்ந்த போலீஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

0
31

அநுராதபுரம் – கெப்பித்திகொல்லாவ வாவியில் மூழ்கி காணாமல்போயிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.

கெப்பித்திகொல்லாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் யாழ் நல்லூர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்றைய தினம் கெப்பித்திகொல்லாவ வாவியில் நீராடிக்கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.