பதுளை – பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் இருந்த 3 மாத குழந்தை ஒன்று தீடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த குழந்தை தீடீரென சுகயீனமுற்ற நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.