யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் தச்சுவேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் பட்டறையின் வாள் வெட்டி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
ஏழாலை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பாலசிங்கம் ஜெகாஸ் என்ற குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டில் மர அரிவு நிலையத்தை நடாத்தி வந்துள்ள நிலையில், நேற்றைய தினம் வழமை போன்று வேலையில் ஈடுபட்டிருந்த போது திடீரென அவரது நெஞ்சில் தச்சு பட்டறையின் வாள் வெட்டி படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் பலத்த காயம் காரணமாக அவர் உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.