4 நாட்கள் காய்ச்சல்.. கொழும்பிலிருந்து வீடு வந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு.!

0
35

யாழில் நான்கு நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த 21 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் கொழும்பில் உயர் கல்வி பயின்று வருபவர் என்றும், சில தினங்களுக்கு முன்னர் யாழ்.பருத்தித்துறையில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நேற்றையதினம் அவரது உடல்நிலை மோசமான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் யாழ் – பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பரந்தாமன் லக்சன் (வயது-21) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கு காரணமான நோய் இருப்பதை உறுதிப்படுத்த மருத்துவ நிபுணர்கள் அவரது உடற்கூற்று மாதிரிகளை மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பியுள்ளனர்.