ஏனைய தமிழ் கட்சிகளுடனும் இணைந்து தமிழரசு கட்சி ஆட்சியமைக்கும் – சுமந்திரன்..!

0
35

தமிழ் கட்சிகளுடனும் இணைந்து ஏனைய உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழரசு கட்சி ஆட்சியமைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இலங்கை தமிழரசு கட்சி பெரும் வெற்றியினை ஈட்டியுள்ளது. பெருவெற்றி என்பது இலங்கை தமிழரசு கட்சி வடக்கிலும் கிழக்கிலும் 58 சபைகளில் நாம் போட்டியிட்டு குறைந்தது 40 சபைகளை வடக்கு கிழக்கு தடவையறையில் இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது.

58 சபைகளில் 40 சபைகளை நாம் கைப்பற்றி இருந்தாலும் ஏனைய சபைகள் பெரும்பான்மை எஞ்சியுள்ளவை இனத்திற்குரிய சபைகளாகவும் காணப்படுகின்றது. மிக விசேடமான விடயம் இலங்கை தமிழரசு கட்சிக்கு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று ஆறு மாத காலத்தினுள் அமோக வெற்றியினை யாழ்ப்பாண மக்கள் வழங்கி உள்ளார்கள். பாராளுமன்ற தேர்தலிலே ஒரு பிம்பம் உருவானது அதாவது 25% வாக்கினை மாத்திரம் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பாராளுமன்ற தேர்தலுக்கான 6 ஆசனங்களில் மூன்று ஆசனங்களை பெற்றிருந்தது. சொற்பளவு வாக்கு விகிதத்தினை கொண்டு மக்கள் ஆணை தமக்கு வந்துவிட்டதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்தது.

ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலே நாங்கள் பெரு வெற்றியினை ஈட்டியுள்ளோம். நாட்டிலே மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக கூறினார்கள். ஆனால் அந்த மாற்றம் மீண்டும் எம்மை நோக்கி வந்துள்ளது. இதற்குப் பிரதான காரணம் தமிழ் மக்கள் என்றும் தங்களுடைய அடையாளத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். நாங்கள் சபைகளை அமைக்கின்ற பொழுது ஏனைய தமிழ் கட்சிகளுடனும் கலந்துரையாடி எவ்வாறு சபையின் ஆட்சியினை அமைப்பது என்பது தொடர்பில் தீவிரமாக கவனத்தினை செலுத்துவோம்.

இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் மூலம் பொதுமக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய சேவைகள் எங்களுடைய பிரதிநிதிகள் மூலம் அந்தந்த பிரதேசங்களில் ஆற்றப்படும். தெரிவு செய்யப்பட்ட எங்களுடைய கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு பயிற்சி பட்டறைகள் அரசியல் ரீதியான கருத்தமர்வுளை இலங்கை தமிழரசு கட்சி தொடர்ச்சியாக நடாத்த உள்ளது. நமது ஆட்சிக்குட்பட்ட உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், நகர பிதாக்கள், மாநகர பிதாக்களுக்கு விசேட கருத்தமர்வுகளை முன்னெடுப்போம்.

இதேவேளை, நான் முன்னர் குறிப்பிட்ட விடயம் இந்த உள்ளூராட்சி சபை தேர்தலிலே ஒரு கட்சி தனியாக போட்டியிடுவதன் தார்பரியம் இப்பொழுது அனைவருக்கும் விளங்கி இருக்கும் என நான் நினைக்கின்றேன். கடந்த தேர்தலின் பொழுது இந்த முறைமையினை நாம் அறிமுகப்படுத்திய பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைத்ததாக கூறினார்கள். மாறாக இன்று ஆசனங்கள் நாம் தனித்து கேட்ட பொழுதிலும் தமிழரசு கட்சி பலமாகவே எழுந்துள்ளது. இருந்த பொழுதிலும் ஏனைய கட்சிகளுக்கும் அதற்குரிய ஆசனங்கள் கிடைக்க பெற்றுள்ளன. இலங்கை தமிழரசு கட்சி பலவீனம் அடையவில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பாக எங்களுடன் முதல் இணைந்து பயணித்த ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தற்போது செயற்படுபவர்கள் அன்புடன் இணைகின்ற பொழுது பல இடங்களில் நாம் ஆட்சிகளை அமைக்கக்கூடியதாக இருக்கும் .

மேலும் வவுனியா மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் வாக்கு அங்குள்ள அரசியல் களம் குறித்து தீவிரமாக சிந்தித்து செயற்படுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.