தடுமாறும் தலைநகரம் – பெரும்பான்மை இன்றி தவிக்கும் கட்சிகள்.. ஆட்சிக்கு பலத்த போட்டி..!

0
37

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகள் வௌியாகியுள்ள நிலையில், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பலத்த போட்டி நிலவி வருகின்றது.

கொழும்பு மாநகர சபையின் பெரும்பான்மையை எதிர்க்கட்சிகள் கைப்பற்றியுள்ளன.

117 உறுப்பினர்களை கொண்ட கொழும்பு மாநகர சபையில் 48 உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் பெரும்பான்மைக்கு தேவையான 69 உறுப்பினர்களைப் பெற்றுள்ளன.

எவ்வாறாயினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 29 உறுப்பினர்களை வென்றுள்ளதோடு, ஆட்சியமைப்பதற்காக ஏனைய கட்சிகளின் உதவியை நாட வேண்டியுள்ளது.

அதேபோன்று 48 உறுப்பினர்களை கொண்டுள்ள தேசிய மக்கள் சக்திக்கும் கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை கைப்பற்ற ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது.

எனவே, தற்போது பெரிதும் பேசும் பொருளாகியுள்ள கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றப்போகும் கூட்டணி எதுவென்பதை அறிய அனைவரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

“புதிய மேயர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்“

கொழும்பு மாநகர சபையில் (CMC) புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்ற கட்சிகளுடன் இணைந்து அமைக்கும், அதே நேரத்தில் புதிய மேயர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்,” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

CMC மற்றும் ஆளும் NPP பெரும்பான்மையைப் பெறாத பிற உள்ளாட்சி அமைப்புகளில் மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற தனது கட்சி தயாராக இருப்பதாக அவர் கூறினார்.