இந்தியாவிலிருந்து பெருமளவு கஞ்சா கடத்தி வந்த மூவர் யாழில் கைது.!

0
130

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேரை கடற்படையினர் நேற்று (6) இரவு கைது செய்துள்ளனர்.

எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து 323.35 கிலோ கேரள கஞ்சாவுடன் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பேசாலை பகுதியையும், மற்றைய இருவர் குருநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.