புதுக்குடியிருப்பு பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது.!

0
18

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் வாக்குச்சாவடிக்கு அண்மித்த பகுதியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவர் சின்னம் அடங்கிய துண்டுபிரசுரத்தினை மக்களுக்கு விநியோகம் செய்த குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலிஸார், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த நபரையும் கார் ஒன்றையும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளரான 38 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.