கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியை போன்று தோற்றமுடைய மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல், குளியாப்பிட்டி பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளியாப்பிட்டி காணி பதிவு அலுவலகத்திற்கு வந்த பெண், செவ்வந்தி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக இஷாரா செவ்வந்தியை போன்ற தோற்றமுடைய பெண்கள் அனுராதபுரம் மற்றும் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.