பகிடிவதை சம்பவம்; மேலும் இரு மாணவர்கள் கைது.. 11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை.!

0
183

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே எட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அதில் நான்கு மாணவர்கள் இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 11 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.