மீட்டியாகொடவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு..!

0
178
Common Photo

நேற்று இரவு காலி – மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மீட்டியகொடவின் தம்பஹிட்டிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்து பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மீட்டியாகொட பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மீட்டியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.