பாதுக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை – கொழும்பு அதிவேக வீதியில் கலகெதர பகுதியிலிருந்து இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த வாகன விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கலகெதர – பாதுக்க பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வாகன விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.