பல்கலைக்கழக மாணவன் மரணம்.. 4 பேர் கைது..!

0
149

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் பல்கலை மாணவர்கள் நால்வர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர் தனது வீட்டில் உயிர் மாய்த்துக் கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரைக் கைது செய்துள்ளனர்.